Home Archive by category

இராமாயண கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுத்த உலகின் மிகப்பெரிய பறவை சிற்பம்

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சடையமங்கலரத்தில் இருக்கும் பிரம்மாண்ட பறவை சிற்பம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

உலகிலேயே மிகப்பெரிய பறவை சிற்பம் இதுவே. சிற்பியும் பிரபல திரைப்பட இயக்குனருமான ராஜீவ் அன்சலின் மனதில் உதித்த யோசனையே ஜடாயு சிலை.

இந்தச் சிற்பத்தையும் அதனோடு சேர்ந்த வளாகத்தையும் மலை உச்சியில் அமைக்க ஏறக்குறைய 15 வருடங்கள் ஆகியுள்ளது.

ராமாயணத்தில் கூறப்பட்டுள்ள ஜடாயுவின் கதை அங்குள்ள பாறையில் ஆங்கிலம், மலையாளம் மற்றும் இந்தி மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் ஜடாயு குறித்து மலையாளத்தின் புகழ்பெற்ற கவிஞரான ஓஎன்வி க்ரூப் எழுதிய கவிதையும் இப்பாறையில் பொறிக்கப்பட்டுள்ளது.

சீதையை ராவணன் கடத்திச் செல்லும்போது, சீதையை காப்பாற்ற முற்பட்ட ஜடாயுவின் இறக்கையை இராவணன் வெட்டி வீழ்த்தினான். 

வழியில் துடித்த ஜடாயு அப்படியே இந்தப் பாறையில் விழுந்ததாக ஜடாயுவின் வீரம் குறத்து ஒரு கதை கூறப்படுகிறது.

அதன்பிறகு ஜடாயுவின் வீரத்தைப் பாராட்டி ராமர் அதற்கு மோட்சத்தை வழங்கியதாகவும் அதனாலேயே இப்பாறை ஜடாயு பாறை என்ற பெயர் பெற்றதாகவும் கூறுகிறார்கள். 

இந்த சிற்பம் ஒரு பெண்ணின் நேர்மைக்காகவும் அவளின் பாதுகாப்பிற்காகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக நுழைவாயிலின் வலதுபுறத்தில் எழுதப்பட்டுள்ளது. 

மேலும், ஜடாயு ஒரு பறவையாக இருந்தாலும் பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக நிற்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜடாயு சிற்பத்தின் பின்னால் கொக்கரனி என்று அழைக்கப்படும் சுனை உள்ளது. இது புனிதமான நீராக கருதப்படுகிறது.

Related Posts