Home Archive by category

கூகுளில் அதிகம் தேடப்படும் ஐஸ்வர்யா ; அதிக சொத்து சேர்த்த ஆசிய நடிகைகள் யார் யார் தெரியுமா?

கூகுளில் அதிகம் தேடப்படும் ஆசிய நடிகை பட்டியலிலும், சம்பளத்தின் மூலமாக அதிக சொத்துகள் சேர்த்த நடிகைகளில் இரண்டாவது இடத்திலும் ஐஸ்வர்யா ராய் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பளத்தின் மூலமாக அதிக சொத்துகள் சேர்த்த ஆசிய நடிகைகள் பட்டியல் அண்மையில் வெளியாகியுள்ளது.

அந்த பட்டியலில், சீனாவை சேர்ந்த பேன் பிங் பிங் என்ற நடிகை முதலிடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.900 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலிலும் இவரே முன்னிலையில் உள்ளதாகவும், 20 மில்லியன் டொலர் சம்பளம் வாங்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கூகுளில் அதிகம் தேடப்படும் ஐஸ்வர்யா ராய்

இரண்டாவது இடத்தில் இந்தியாவை சேர்ந்த ஐஸ்வர்யா ராய் உள்ளார்.

இவரது சொத்து மதிப்பு ரூ.800 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல கூகுளில் அதிகம் தேடப்படும் ஆசிய நடிகை பட்டியலிலும் முதல் பத்து இடங்களில் ஐஸ்வர்யா ராய் இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்தபடியாக, 3 மற்றும் 4வது இடங்களில் முறையே பிரியங்கா சோப்ராவும், தீபிகா படுகோனேவும் உள்ளார்கள்.

இந்தியாவில் அதிக வருமான வரி செலுத்தும் நடிகையாக கருதப்படும் பிரியாங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு ரூ.760 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts