நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்: மாலையும் கழுத்துமாக பங்கேற்ற புதுமண தம்பதி
நீட் தேர்வுக்கு எதிராக திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவ அணி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம் சற்று முன்னர் தொடங்கியது.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்க்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று திமுக அரசு தொடர்ந்து போராடி வருகிறது.
ஆனால், நீட் விலக்கு மாசோதாவில் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் பேசியது விவாதப் பொருளானது.
நீட் தேர்வு காரணமாக சென்னையில் ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
அந்த துக்கத்தில் அவரின் தந்தை செல்வசேகரும் தற்கொலை செய்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க கோரி தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்தது.
அதன்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவ அணி சார்பில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
போராட்டமானது சற்றுமுன்னர் தொடங்கியது.
சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிரான திமுகவினரின் போராட்டத்தில் புதுமணத்தம்பதி மாலையும் கழுத்துமாக வந்து கலந்து கொண்டனர்.