Home Archive by category

மக்களவைத் தேர்தலில் கோவையில் போட்டியிடுகிறாரா கமல்ஹாசன்?

2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து இறுதி முடிவெடுக்க கட்சி நிர்வாகிகளுடன் அவர் கோவையில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

மக்கள் நீதி மையம் கட்சி தொடங்கப்பட்ட பின்பு கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. இதையடுத்து 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த தேர்தல்களில் 2.5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது.

குறிப்பாக, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரை பின்னுக்கு தள்ளி 51,481 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வானதி சீனிவாசன் 53,209 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுமார் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் கோவை தெற்கு தொகுதியில் வெற்றியை தவறவிட்டார்.

இந்நிலையில் சமீப காலமாக திமுக, காங்கிரஸ் கட்சிகளுடன் கமல்ஹாசன் நெருக்கம் காட்டி வருகின்றார். மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நடத்திய இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக கமலஹாசன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

காங்கிரஸ் கட்சியுடனும், திமுகவுடனும் நெருக்கம் காட்டி வரும் நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், கடந்த மாதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை " என்ற புகைப்பட கண்காட்சியினை சென்னையில் கமலஹாசன் திறந்து வைத்தார்.

Related Posts