Home Archive by category

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடும் வெயிலால் 11 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் திறந்த வெளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 11 பேர் உயிரிழந்துள்ளனர். 

மகாராஷ்டிரா மாநில அரசு சார்பில் நவி மும்பையில் பூஷண் விருது வழங்கு விழா நேற்று நடைபெற்றது. திறந்த வெளியில் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர்.

இந்நிலையில், நேற்று மதியம் வெப்பநிலை 38 டிகிரி செயல்சியஸாக பதிவாகியிருந்தது. கூட்டத்தில் அமர்ந்திருந்த பலர் வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் விழுந்துள்ளனர். 

இதில் 11 பேர் உயிரிந்துள்ளதுடன், 50 இற்கும் மேற்பட்டோர் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். 

சம்பவம் குறித்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஷிண்டே கூறுகையில் இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

Related Posts