Home Archive by category

இந்தியா, அமெரிக்க சிறப்புப் படைகள் போர் பயிற்சி

சீனாவுடனான மோதலுக்கு மத்தியில், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் சிறப்புப் படைகள் போர் விமானங்களை பயன்படுத்தி கூட்டு பயிற்சி நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளன.  

துல்லியமாக வழிநடத்தப்பட்ட குண்டுகள் துல்லியமாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையும் வகையில், லேசர் மூலம் முன்னணிப் பகுதிகளில் இலக்குகளை நியமிப்பது உட்பட போர் விமான நடவடிக்கைகளில் இரு நாட்டு படைகளும் ஈடுப்பட்டுள்ளன.

இரு நாடுகளின் துருப்புக்களும், 'எக்ஸ் கோப் இந்தியா' என்ற குறியீட்டுப் பெயரில் ஒன்றிணைந்துள்ளன. அமெரிக்க விமானப்படை எப்-15 ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானங்களை அடுத்த கட்டத்தில் ஈடுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை பல போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உலக அளவில் இந்திய இராணுவத்தின் பிம்பத்தை வலுப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.

எவ்வாறாயினும் எல்லையில் சீனாவுடனான மோதலில் தரைப்படைகளுடன் இணைந்து நாட்டின் வலிமையான ஆயுதமாக இந்திய விமானப்படை உள்ளது. எனவே தான்; பல சந்தர்ப்பங்களில் எல்லைக்கு மிக அருகில்; நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

Related Posts