Home Archive by category

வெயிலுக்கு பானகம்

வெயில் காலம் கடுமையாக ஆரம்பமாகிவிட்டது. என் டாக்டர் நண்பர்கள் கூறிய எளிய கூல் டிரிங்ஸ்! நீர் மோரில் இஞ்சி தட்டி போட்டு கருவேப்பிலை, கொத்துமல்லியை தூவிவிட்டு, அலுவலகம் செல்லும் போது, ஒரு லிட்டருக்கு குறையாமல் கொண்டு செல்லுங்கள். காபி, டீ தவிர்த்துவிட்டு தாகம் எடுக்கும் போது எல்லாம் குடியுங்கள்.

எந்தவெய்யில் கால நோய்களும் அணுகாது. நீர் மோர் காவிரி வெள்ளம் போல இருக்க வேண்டும் என்றார். ஒரு லிட்டர் தண்ணீரில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து, சிறிது உப்பு போட்டு வைத்து கொள்ளுங்கள். அடிக்கடி தாகம் எடுக்கும் போது குடிக்கலாம்.

வெயில் காலத்திற்கு நல்ல எனர்ஜி டானிக். செயற்கை குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் தவிர்த்துவிடுங்கள் என்றார்.  கோடை காலத்தில் நாவறட்சி தீர, இயற்கை பானங்கள் இளநீர், நுங்கு, மோர், எலுமிச்சை சர்பத், தர்பூசணி பழம் எடுத்து கொள்ளலாம். இவற்றோடு பானகம் ஒன்றையும் அவ்வப்போது தயார் செய்து அருந்தலாம்.

இதற்கு வெறும் புளி, கருப்பட்டி, தண்ணீர் போதும். புளியை தண்ணீரில் நன்கு கரைக்க வேண்டும். கருப்பட்டியை தட்டி அதோடு நன்கு கலக்க வேண்டும். பாத்திரத்தில் துணியால் வடிகட்ட வேண்டும். சுக்கும் ஏலக்காயும் சேர்த்து கொள்ளலாம். பானகம் ரெடி. இந்த பானக தயாரிப்பு இப்போது மெல்ல மறைந்து வருகிறது.

கோடை காலத்தில், வெப்பத்தால் ஏற்படும் களைப்பை விரட்டும். பழரசத்தை விட நல்லது இந்த பானகம். இதையும் படியுங்கள்: குலதெய்வத்தை மறவோம் இதன் பார்முலா : கால்சியம் + இரும்பு சத்து + விட்டமின்கள் + எனர்ஜி = பானகம். இரும்பு சத்தை அமினோ அமிலங்களை பனைவெல்லத்தில் இருந்தும், புளியிலிருக்கும் விட்டமின் சி-யானது பனைவெல்லத்துடன் இணைந்து, உடனடி எனர்ஜியாக உடலுக்கு அளிக்கிறது.

 சுக்கின் நன்மை நம் எல்லோருக்கும் தெரியும். ஏலக்காய் உணவு குழாயில் ஏற்படும் தொற்றுகள், செரிமானத்தை சரி செய்யும். அற்புதமான பானகம். இந்த வெய்யிலுக்கு தயாரிப்பதும் எளிது. எது எப்படியோ, இவைகளுடன், தேவையான அளவு தண்ணீர் குடிக்க மறந்து விடாதீர்கள். வெயிலில் அதிகம் அலைய வேண்டாம்.

 

Related Posts