பழச்சாறு இப்படி தான் குடிக்கணும்
பழங்களை பழமாகவே சாப்பிடுவது தான் சிறந்தது. அதைச் சாறாக்கி கூழாக்கி குடிப்பது சிறந்தததன்று. பழமாக உண்ணும் போது இன்னும் அதிகமான நார்ச்சத்து கிடைக்கும்.
மேலும் பழச்சாறில் சீனி / சர்க்கரை கலந்து பருகுவது மிகப்பெரும் தவறு. அது அந்த பழத்தின் இயற்கை சுவையை மறக்கடித்து விடுகிறது. மேலும் இனிப்பு கலந்த பழச்சாறு நன்மை தருவதை விட கேட்டைத்தான் அதிகமாக தரும்.
ஆனால் நானும் பழச்சாறுக்கடைகளில் பார்த்து விட்டேன். சீனி இல்லாமல் எங்கும் விற்பனை நடப்பதில்லை. பழத்தை உண்ணுங்கள். சாறாக பருகவேண்டும் எனில் இனிப்பு சேர்க்காமல் அந்த பழத்தின் இயற்கை சுவையோடு பருகுங்கள்.
ஒரு செயற்கை குளிர்பானம் குடிப்பதை விடவும் பழச்சாறு குடிப்பது சிறந்தது தான். ஆனால் அதில் சீனி/ சர்க்கரை சேர்க்கும் வரை மட்டுமே அது செயற்கை குளிர்பானங்களை விடச் சிறந்தது என்பதை அறிக.
சிறார் சிறுமியருக்கு பேக்கரி உணவுகளைக் காட்டிலும் பழங்கள் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ். நீரிழிவற்ற உடல் பருமன் பிசிஓடி ரத்தகொதிப்பற்ற மக்களும் பழங்களை ஆரோக்கியமான ஸ்நாக்காக அளவோடு உட்கொள்ளலாம்.
பல் இல்லாத முதியோர் குழந்தைகளுக்கு நோயாளிகளுக்கு பழத்தை சாறாக்கி வழங்கலாம். பழங்களில் மேற்படி இனிப்பை சேர்ப்பது என்பது அதில் இருக்கும் நன்மைகளை மழுங்கடிக்கச் செய்து விடுகிறது .