உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு - காய்கறி சூப்
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு - 3 ஸ்பூன்
தண்ணீர் - 4 கப்
கேரட் - 1
பசலை கீரை - அரை கப்
பச்சை பட்டாணி - கால் கப்
காலிஃப்ளவர் - சிறிதளவு
துருவிய கோஸ் - கால் கப்
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
சோயா பீன்ஸ் - கால் கப்
பீன்ஸ் - கால் கப்
எலுமிச்சை பழம் - பாதி உப்பு - தேவைக்கு மிளகு தூள் - தேவைக்கு கொத்தமல்லி தழை - சிறிதளவு நெய் - 1 ஸ்பூன்
செய்முறை * கடாயில் நெய் ஊற்றி சூடானதும் கேழ்வரகு மாவை போட்டு வறுத்து கொள்ளவும்.
* பீன்ஸ், கேரட், பசலைக்கீரை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* காலிஃப்ளவரை சிறிய பூக்களாக உதிர்த்து வைக்கவும்.
* கேழ்வரகு மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் நெய், பீன்ஸ், கேரட், பசலைக்கீரை, காலிஃப்ளவர், சோயா பீன்ஸ், துருவிய கோஸ், பச்சை பட்டாணி, உப்பு சேர்த்து மிதமான தீயில் 12 நிமிடம் கொதிக்க விடவும்.
* அடுத்து அதில் நறுக்கிய பூண்டை சேர்த்து கொதிக்கவிடவும்.
* கரைத்த வைத்த கேழ்வரகு கரைசலை ஊற்றி(கட்டி விழக்கூடாது) நன்றாக கலக்கி விடவும். அதை 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
* அடுத்து அதில் மிளகுத்தூள், கொத்தமல்லி தழை, எலுமிச்சை சாறு சேர்த்து 1 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும். * இப்போது சூப்பரான கேழ்வரகு - காய்கறி சூப் ரெடி. * விருப்பான எல்லா காய்கறிகளையும் இதில் சேர்த்து கொள்ளலாம்.