Home Archive by category

மழை வருவதை முன்னேமே அறிவிக்கும் வானிலை கோவில்

மழை வருவதை வானிலை மையம் கணித்து செய்திகளைத் தரும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பெஹ்டா கிராமத்தில் உள்ள கோவில் ஒன்றும் மழை வருவதை கணித்து சொல்லும் என்பது யாருக்கும் தெரியாது.

கான்பூரில் உள்ள ஜெகநாதர் கோவில் பிதர்கான் தொகுதியிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலுக்கு தொலைதூரத்தில் இருந்தும் இங்கு வந்து செல்வது வழக்கம். இந்த கோவில் பல ரகசியங்களை தன்னுள் அடக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆன்மீக மர்மங்கள் நிறைந்த நாடாக கருதப்படும் இந்தியாவில் இன்றுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியாத ரகசியங்களை கொண்ட பல கோவில்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ளன. இந்த மர்மங்களைக் கண்டு, வெளிநாட்டவர்களும் ஆச்சரியமடைந்துள்ளனர். ரகசியங்கள் நிறைந்த கோவில்கள் தொடர்பான பல செய்திகளை நீங்கள் கேட்டிருக்கலாம்.

கான்பூரின் ஜெகநாதர் கோவில் மழை பற்றிய கணிப்பை வெளியிடும் என்றும், அதுவும் ஒரு வாரத்திற்கு முந்தைய மழைக் கணிப்புகள் துல்லியமாக இருப்பதாகவும் சுற்றுவட்டார மக்கள் தெரிவிக்கின்றனர். பிரசித்தி பெற்ற இந்தக் கோவிலுக்கு வெகு தொலைவில் இருந்தும் மக்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்

இக்கோயில் மழையை முன்கூட்டியே கணிப்பதாக கூறப்படுகிறது. மழை பெய்வதற்கு 6-7 நாட்களுக்கு முன்பாகவே இக்கோயிலின் மேற்கூரையில் இருந்து நீர்த்துளிகள் சொட்ட ஆரம்பிக்கும் என இக்கோயிலைச் சுற்றியுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். ஒரு துளி மழை எந்த அளவில் இருக்கிறதோ, அதே மாதிரியான மழை பெய்யும் என்று கிராம மக்கள் கூறுகிறார்கள்.

 

Related Posts