பேரணியில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைது

நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறையினர் இன்று 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகம் முதல் விஜய் சவுக் வரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர்.
இதையடுத்து, ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்களை பொலிஸார் கைது செய்தனர்.
பொலிஸார் கைது செய்த நிலையில் ராகுல் காந்தி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.