Home Archive by category

இந்தியர்களின் உத்தேச ஆயுள் 1951இல் 32... 2022இல் 70

இந்தியா சுதந்திரம் பெற்ற 75 வருடங்களில், கலாச்சாரம், சமூகம், அரசியல், பொருளாதாரம், ராணுவம், விளையாட்டு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் வியக்கத்தக்க அளவில் முன்னேறி தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளது. 1947 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் பெற்ற இந்தியா, நூற்றுக்கணக்கான ஆண்டு அந்நிய ஆட்சியால் வறுமை மற்றும் சீர்கேட்டின் புதைகுழியில் சிக்கியிருந்தது. சுதந்திரம் அடைந்து  75 ஆண்டுகாலப் பயணத்தில், தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி பீடுநடை போடுகிறது இந்தியா. கடந்த 75 ஆண்டுகளில், உள்நாட்டுப் பிரச்சனைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில், நாடு இதுபோன்ற பல்வேறு சாதனைகளை செய்துள்ளது இந்தியர்களாகிய நமக்கு பெருமையளிக்கிறது.

அதிலும் குறிப்பாக, சுகாதாரத் துறையில் சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டில் பல மாறுதல்கள் வந்துள்ளன. நாடு விடுதலை அடைந்தபோது, நாட்டில் சுகாதார வசதிகள் குறைவாகவே இருந்தன.

இந்தியா எவ்வளவு மாறிவிட்டது?

மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாடு சுதந்திரம் அடையும் போது, ​​50 ஆயிரம் டாக்டர்கள் மட்டுமே இருந்தனர், அவர்களின் எண்ணிக்கை தற்போது 13 லட்சத்து 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 1947அம் ஆண்டில் நாட்டில் 30 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன, ஆனால் இப்போது 600-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

இது மட்டுமின்றி, சுதந்திரம் அடைந்த போது 2,014 அரசு மருத்துவமனைகள் மட்டுமே இந்தியாவில் இருந்தன, தற்போது அரசு மருத்துவமனைகளின் எண்ணிக்கை 23 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. அப்போது நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை 725 ஆக இருந்தது, இன்று 23,391 ஆக அதிகரித்துள்ளது.

Related Posts