Home Archive by category

‘ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் ஒருமித்த பிரதமர் வேட்பாளராக ராகுல்’

2014 மக்களவை தேர்தலில், நாட்டில் உள்ள ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் ஒருமித்த பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி நிறுத்தப்படுவார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கமல்நாத் தெரிவித்துள்ளார்.

அடுத்த மக்களவை தேர்தலுக்கு இன்னும் 2 வருடங்கள் இருந்தபோதும் மத்தியில் அதற்கான ஆயத்தங்களில் எதிர்க்கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. அடுத்தாண்டு 9 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்கள் வருகின்றன. இந்த சட்டப்பேரவை தேர்தல்களின் பிரச்சாரத்தில், எதிர்வரும் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தையும் கலக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பினை சட்டப்பேரவை தேர்தல்களில் அறுவடை செய்யவும், அதனை சூடு குறையாது மக்களவை தேர்தல் பிரச்சாரத்துக்கு கடத்தவும் காங்கிரஸ் முனைகிறது. இதற்கான முன்னேற்பாடுகளின் அங்கமாக ராகுல் காந்தியை ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் ஒருமனதான பிரதமர் வேட்பாளராகவும் காங்கிரஸ் முன்மொழிந்துள்ளது.

எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் ஆம் ஆத்மி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் போன்றவை காங்கிரஸ் எதிர்ப்பிலும் தீவிரமாக இருக்கின்றன. இந்த நிலையில் காங்கிரஸின் ’பிரதம வேட்பாளராக ராகுல் காந்தி’ என்ற ஏற்பாட்டுக்கு அவர்கள் ஒத்துழைப்பது கடினம். எதிர்க்கட்சிகள் பிளவுற்று நிற்பதையே தனக்கு சாதகமாக பாஜக எதிர் நோக்குகிறது. இந்த சூழலில் 2013-ம் ஆண்டின் பல்வேறு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களுக்கான கூட்டணிகள், அடுத்து வரும் மக்களவை தேர்தல் கூட்டணியை தீர்மானிக்க உதவும்.

Related Posts