2014ஆம் ஆண்டு முதல் 2,835 இந்திய மீனவர்கள் விடுதலை

2014ஆம் ஆண்டு முதல் இதுவரை 2,835 இந்திய மீனவர்கள் இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது மக்களவையில் உரையாற்றிய போதே வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்களின் பிரச்சனை குறித்து பிரதமர் மோடி கவனம் செலுத்தி இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பலமுறை பேசியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மீனவர்கள் விடுவிக்கப்பட்டால், அது சென்னையில் இருந்து கடிதம் எழுதுவதால் அல்ல, டெல்லியில் உள்ள ஒருவர் இந்த விவகாரத்தை எடுத்துச் செல்வதால் தான் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.