தாலிபானுக்கு நிகராக தண்டனை - அப்பாவி சிறுவனை கட்டிவைத்து அடித்த கொடூரம்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அசாம்கரில் கொடூர நிகழ்வு ஒன்று நடந்ததுள்ளது. 10 வயது சிறுவன், ஒரு மொபைல் திருடிவிட்டதாக குற்றஞ்சாட்டி அவனை நான்கு பேர் சேர்ந்துள்ளனர் சித்ரவதை செய்துள்ளனர், அதை ஊரே சேர்ந்து வேடிக்கை பார்த்துள்ளது. சிறுவனை கம்பத்தில் கட்டிவைத்து, மிளகை அவனது வாயில் திணித்து கொடுமை செய்துள்ளனர்.
இதனை அங்குள்ளவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அது வைரலாகியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை புகார் கொடுத்ததை அடுத்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
news://twitter.com/i/status/1584017889954131970
இந்த சம்பவம் அசம்கரில் உள்ள ஹதிஸா கிராமத்தில் நடந்துள்ளது. அந்த சிறுவனை 4 பேர் சுமார் மூன்று மணிநேரத்திற்கும் மேலாக அடித்ததாக கூறப்படுகிறது. நான்கு தினங்களுக்கு முன்னர், அதே கிராமத்தைச் சேர்ந்த ராம் அசாரே ராம், சஞ்சய் ராம், சுரேந்திர ராம், விஜய் ராம் ஆகிய நான்கு பேரும் இணைந்து அந்த சிறுவன் மொபைலை திருடிவிட்டதாக அவன் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து, சிறுவனின் வீட்டை சோதனையும் செய்துள்ளனர். அந்த சிறுவனை அவர்கள் சித்ரவதை செய்தபோது, அந்த ஊர் மக்கள் யாரும் அவனது பெற்றோரிடம் தகவல் கூறவில்லை எனவும் தெரிகிறது. நீண்ட நேரத்திற்கு பின்னர்தான் சிறுவனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. அதன்பின், அந்த சிறுவன் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளான் என தெரிவிக்கப்படுகிறது.