Home Archive by category

இந்தியாவில் எடுத்துக்காட்டாக மாறிய ஈழத்தமிழர் போராட்டம்

இலங்கையில் தமிழர்களை கையாண்ட விதமே போருக்கு வழிவகுத்தது என இந்திய மத்திய வங்கியான ரிசேர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்துக்களை பகிர்ந்த அவர்,

இன நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்காக பாடுபடவேண்டும். இது தொடர்பில் இலங்கையின் நிலவரம் சிறந்த பாடமாக அமையும்.

அதுவே நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கு வலுவாக இருக்கும் .
 
இலங்கையில் நடுத்தர வருமானத்தைக் கொண்டிருந்த சிறுபான்மையினரை கையாள்வதில் பிரச்சினைகள் இருந்தன.

இலங்கையில் இருந்த சிறுபான்மையினர் மத்தியில் வேலையில்லா பிரச்சினை எழுந்தபோது, அதனை அரசியல்வாதிகள் கண்டு கொள்ளவில்லை. அதனை கையாள்வதில் கவனம் செலுத்தவில்லை. இதனையடுத்தே அங்கு உள்நாட்டு போர் ஒன்று ஏற்பட்டது.

எனவே இந்தியா அதனை பாடமாகக் கொண்டு இந்தியாவில் இன நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்காக பாடுபடவேண்டும்.

இந்தியாவில் 10 வருடங்களுக்கு முன்னர் இருந்த ஜனநாயக பண்புகளில் தற்போது குறைவு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts