சீன ரொக்கெட் ஒன்றின் சிதைவுகள் இந்திய கடலில் : அமெரிக்கா குற்றச்சாட்டு
சீன, ரொக்கெட் ஒன்றின் சிதைவுகள், இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் பூமியில் விழுந்ததாக அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த சிதைவுகள் எங்கு வீழ்ந்தன என்பது தொடர்பில் சீனா தகவல்களை பரிமாறவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
லோங் மார்ச் 5 என்ற இந்த ரொக்கட்டின் பெரும்பாலான எச்சங்கள் வளிமண்டலத்தில் எரிந்துவிட்டதாக சீனாவின் விண்வெளி நிறுவனம் கூறியுள்ளது.
முன்னதாக, இந்த ரொக்கட், மக்கள் வசிக்கும் பகுதியில் விழுவதற்கான நிகழ்தகவு மிகவும் குறைவு என்று விண்வெளி நிபுணர்கள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.