ஒன்று வாங்கினால் 2 இலவசம்- டெல்லியில் அலை மோதும் கூட்டம்

சரக்கு வாங்க சலுகைகள் அறிவித்தால் எந்த மது பிரியர்கள் தான் சும்மா இருப்பார்கள். இப்படி தான் டெல்லியில் மதுக்கடைகள் வெளியிட்ட அறிவிப்பால் மதுபிரியர்கள் திரண்டனர்.
டெல்லியில் மொத்தம் 468 தனியார் மதுபான விற்பனை கடைகள் உள்ளன. இந்த நிலையில் மது விற்பனை கடைகளுக்கான லைசென்சு பெற புதிய நடை முறையை அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை(1-ந்தேதி) முதல் டெல்லியில் தனியார் மது விற்பனை கடைகள் அனைத்தும் மூடப்படுகிறது.