இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்தியாவில் கடந்த 2018 முதல் 2022 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை 23.5 வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், காட்டு விலங்குகளின் எண்ணிக்கை 3,682 ஆக உயர்வடைந்துள்ள எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கினறன.
இந்த நிலையில், உலகிலுள்ள 75 வீதமான புலிகள் இந்தியாவிலேயே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டில், இந்தியாவில் 2,197 புலிகள் காணப்பட்ட நிலையில், குறித்த அதிகரிப்பானது 20 ஆண்டுகால அறிவியல் அடிப்படையிலான புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் வெற்றியை காட்டுவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், சுமார் 80 வீதமான புலிகள் தற்போது மத்தியபிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் அசாம் உள்ளிட்ட 18 மாநிலங்களில் எட்டு பகுதிகளில் வாழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் 785 புலிகளும், கர்நாடகாவில் 563 புலிகளும், மகாராஷ்டிராவில் 444 புலிகளும் புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதனிடையில், உலகளாவிய ரீதியில் 2016 ஆம் ஆண்டில் 3,890 ஆக காணப்பட்ட புலிகளின் எண்ணிக்கை 2023 இல் 5,575 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் புலிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என Global Tiger Forum ஐ மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ளன.