Home Archive by category

மணிப்பூர்பொலிஸ் பொறுப்பதிகாரியை நேரில் முன்னிலையாகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு

மணிப்பூர் பொலிஸ் பொறுப்பதிகாரி நீதிமன்றில் நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே பெண்களை நிர்வாணமாக்கி வீதியில் அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் மூன்று மாதங்களாக நிலவிவரும் பதற்றமான சூழலை கட்டுப்படுத்த முடியாமல் மாநில, மத்திய அரசுகள் சிரமப்பட்டு வருகின்றன.

இந்த வழக்கில் அரசு தரப்பில் முன்னிலையா தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, மணிப்பூர் கலவரத்தில் இதுவரை 6,532 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மணிப்பூர் விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவிக்கையில்,

மணிப்பூரில் சட்டம், ஒழுங்கு செயலிழந்துள்ளது.

மணிப்பூர் பொலிஸார் கட்டுப்பாட்டை முழுவதுமாக இழந்துள்ளனர்.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய இரண்டு மாதங்கள் ஆகிறது.

கைது நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

வாக்குமூலம்கூட பெறவில்லை.

மணிப்பூர் பொலிஸ் பொறுப்பதிகாரி என்ன செய்து கொண்டிருக்கிறார்?

ஆதரவு கேட்ட பெண்களை வன்முறையாளர்களிடம் பொலிஸார் ஒப்படைத்தது குறித்து விசாரணை நடத்தினாரா?

மொத்தமுள்ள 6,500 வழக்குகளில் 50 வழக்குகள் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிற வழக்குகளின் நிலை என்ன? மணிப்பூர் பொலிஸார் நடவடிக்கை எடுக்கும் என்று எப்படி நம்புவது?” போன்ற கேள்விகளை முன்வைத்துள்ளார்.

அதற்கமைய, மணிப்பூர் பொலிஸ் பொறுப்பதிகாரி ராஜீவ் சிங்கை எதிர்வரும் ஒகஸ்ட் மதம் நான்காம் திகதி முன்னிலையாகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Posts