Home Archive by category

வானத்தில் ஜொலித்த சந்திராயன்-3 ; ஆதாரத்தினை வெளியிட்ட ஆர்வலர்

அவுஸ்திரேலியாவில் இரவு நேரத்தில் வானில் தெரிந்த சந்திராயன்-3 விண்கலத்தின் வசீகரிக்கும் புகைப்படத்தை வானியல் ஆர்வலரான டிலான் ஓ'டோனல் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சந்திராயன்-3 இன் நேரலை வெளியீட்டை யூ-டியூப்பில் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன்பிறகு சுமார் 30 நிமிடங்கள் கழித்து, சந்திராயன்-3 தனது வீட்டைக் கடந்து சென்றபோது இரவு நேரத்தில் அதன் புகைப்படத்தை எடுக்க முடிந்ததாகவும் வானியல் ஆர்வலரான டிலான் ஓ'டோனல் தெரிவித்துள்ளார்.

மேலும், மின்னும் நட்சத்திரங்களின் பின்னணியில் மயக்கும் நீல நிறத்தில் சந்திராயன்-3 விண்கலம் தெரிகிறது டிலான் ஓ'டோனல் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts