Home Archive by category

தமிழகம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்ள நடிகர் விஜய் திட்டம்

தமிழகம் முழுவதும் நடிகர் விஜய் நடைப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசியலில் நுழையும் முனைப்பில் உள்ள நடிகர் விஜய் கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் தமிழகம் முழுவதும் உள்ள சட்டபேரவை தொகுதிகளில், முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

தொடர்ந்து நேற்று பனையூரில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனையில் விஜய் ஈடுபட்டார்.

இந்நிலையில், நடிகர் விஜய் தமிழகம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களின் ஆதரவையும், வரவேற்பையும் பார்க்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், லியோ பட வெளியீட்டுக்கு முன்னதாகவே இந்த நடைப்பயணமானது திட்டமிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Related Posts