Home Archive by category

மேற்குவங்க உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை!

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. 

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல்  ஜூலை 8-ம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டி போட்டு வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். தேர்தலுக்கு முன்னர் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறையில் 19 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 8ம் தேதி நடைபெற்ற இந்த தேர்தலில் கிட்டத்தட்ட மாநிலம் முழுவது 2.06 லட்சம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தல் அன்றும் பல்வேறு வாக்குச் சாவடிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. தேர்தல் நாள் அன்று மட்டும் 18 பேர் உயிரிழந்தனர்.இந்த நிலையில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. காலை 11மணி நிலவரப்படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 1629 பஞ்சாயத்துக்களில் முன்னிலை பெற்றது. பாஜக 364 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 362 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 118 பஞ்சாயத்துகளிலும் முன்னிலை பெற்றன.

கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 90 சதவீத இடங்களில் வெற்றிபெற்றிருந்த நிலையில் இந்த தேர்தலிலும் திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts