இந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையேயான பயணிகள் கப்பல் சேவையில் தாமதம்
இந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையேயான பயணிகள் கப்பல் சேவையை இந்த வருட இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை என விமான சேவைகள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வா தெரிவித்தார்.
காங்கேசன்துறை துறைமுக பயணிகள் முனைய திறப்பு விழாவில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இந்தியா மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான வேலைத்திடங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எவ்வாறாயினும் அது எவ்வளவு காலத்தில் நிறைவடையும் என தற்பொழுது கூற முடியாது என தெரிவித்தார்.
அது இந்த வருட கடைசியாக இருக்கலாம் அல்லது அடுத்த வருடமாக இருக்கலாம் எனவும் அதற்கான வேலைகள் முடிவுற்ற பின்னர் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.