Home Archive by category

பா.ஜ.கவை பின்தள்ளி காங்கிரஸ் முன்னிலை

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரே கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவின்போது எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.

கருத்துக் கணிப்புகள்

பாரதிய ஜனதா கட்சியின் தென்னிந்திய நுழைவு வாயிலக கருதப்படும் கர்நாடகத்தில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் காங்கிரஸிற்கு ஆதரவாக இருந்தன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என்றும் காங்கிரஸிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகின்றன.

மும்முனைப் போட்டி

காங்கிரஸ், பாரதிய ஜனதா, மதசார்பற்ற ஜனதா தளம் (ஜே.டி.எஸ்) உள்ளிட்ட கட்சிகள் இடையே மாநிலத்தில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், ஜே.டி.எஸ் தலைவர் குமாரசாமி கிங் மேக்கராக செயல்பட வாய்ப்புகள் எனவும் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

73 சதவீத வாக்குப்பதிவு

2023 சட்டமன்ற தேர்தலில் 73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. விஜயபுரா பகுதியில் நடந்த வன்முறை சம்பவத்தில் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

புகார்

கர்நாடக இறையாண்மை குறித்து பேசியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீது பாரதிய ஜனதாவினர் புகார் அளித்தனர்.
தேர்தல் பரப்புரையின்போது நரேந்திர மோடியை விஷப் பாம்பு என காங்கிரஸும், அதற்குப் பதிலடியாக சோனியா காந்தியை விஷக் கன்னி என பாரதிய ஜனதாவும் விமர்சித்தன.

பாதுகாப்பு

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் மாநிலத்தில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.
அதன்பின்னர், வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. முன்னணி வெற்றி நிலவரங்கள் காலை 11 மணிக்குள் தெரிந்துவிட வாய்ப்புகள் உள்ளன.

Related Posts