Home Archive by category

ஒரே ராசிக்குள் நுழையும் மூன்று கிரகங்கள்: இந்த ராசிகாரர்களுக்கு ராஜயோகம் தான்!

நடப்பு ஆண்டு (2022) டிசம்பர் மாதம் கிரக நிலைகளின் அடிப்படையில் மிகவும் சிறப்பான மாதமாக இருக்கும். ஜோதிட சாஸ்திரப்படி டிசம்பர் கடைசி வாரத்தில் சனி, புதன், சுக்கிரன் ஆகிய மூன்றும் ஒரே ராசியான மகரத்தில் கூடும். சனி ஏற்கனவே மகர ராசியில் இருக்கிறார்.

மறுபுறம், டிசம்பர் 28 அன்று, புதன் கிரகம் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைகிறது. மேலும் அடுத்த நாள், டிசம்பர் 29, 2022 அன்று, சுக்கிரனும் தனுசு ராசியிலிருந்து வெளியேறி மகர ராசிக்குள் நுழைகிறார்.

டிசம்பர் மாத இறுதியில், சனியின் ராசியான மகரத்தில் புதன், சுக்கிரன் மற்றும் சனி கூடுவது மிக முக்கியமான மாற்றத்தைக் கொண்டுவரும்.

12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், ஆனால் குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாகவும், செல்வத்தை அள்ளித தருவதாகவும் இருக்கும்.

மேஷம்: டிசம்பரில் புதன்-சுக்கிரன் மற்றும் சனி சேர்க்கை மேஷ ராசிக்காரர்களுக்கு அளப்பரிய பலன்களைத் தரும். தொழிலில் விரைவான முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. புதிய தொழில் தொடங்கலாம். பண வரவும் சாதகமாக இருக்கும். எதிர்பாராத பண ஆதாயம் உண்டாகும்.  

கன்னி: மகர ராசியில் புதன், சுக்கிரன், சனி ஒன்று சேர்ந்தவுடன் கன்னி ராசிக்காரர்களுக்கு சுபகாலம் தொடங்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சம்பளம் உயரும். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டு.  

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சனி, புதன், சுக்கிரன் வலுவான பலன்களைத் தருவார்கள். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

புதிய வழிகளில் பணம் கிடைக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். திடீரென்று மூதாதையர் சொத்துக்கள் கிடைக்கும். திருமண வாய்ப்புகள் உண்டாகும்.

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு சனி-புதன்-சுக்கிரன் இணைவது பெரும் வெற்றியைத் தரும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வருமானத்தில் அபரிமிதமான அதிகரிப்பு ஏற்படலாம். தொழிலதிபர்கள் பெரும் பணம் பெறுவார்கள். இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும்.

Related Posts