Home Archive by category

சுக்கிரன் ராசி மாற்றம்: இந்த ராசிக்காரர்களுக்கு எப்படி?

ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரன் ஒரு முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் சுப ஸ்தானத்தில் இருந்தால், அன்னை மகாலட்சுமியின் சிறப்பு அருள் கிடைக்கும். மறுபுறம், சுக்கிரன் அசுபமாக இருக்கும்போது, ​​பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நவம்பர் 11ம் தேதி சுக்கிரன் ராசி மாறப் போகிறார். இந்த நாளில் சுக்கிரன் விருச்சிக ராசியில் நுழைகிறார். 

பொதுவாக அனைத்து கிரகங்களின் ராசி மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சுக்கிரனின் ராசி மாற்றமும் அனைத்து ராசிகளிலும் சில மாற்றங்களை கொண்டு வரும். எனினும், சில ராசிகளுக்கு இந்த மாற்றம் அபரிமிதமான நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிர பெயர்ச்சியின் விளைவால், உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. கௌரவம் கூடும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பொருளாதார நிலை மேம்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் லாபம் உண்டாகும். அன்னை லட்சுமியின் அருள் கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றத்தால் பணி இடத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். வருமானத்தில் அதிகரிப்பு இருக்கும். நிதி பிரச்சனைகள் சரியாகும். 
மனைவியுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். இதன் காரணமாக திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் வரப்பிரசாதமாக அமையப் போகிறது. இந்த காலகட்டத்தில் முதலீடு செய்வது நன்மை தரும். இப்போது செய்யப்படும் முதலீட்டால், வருங்கலாத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு தடைபட்ட வேலைகள் நடந்து முடியும். பணியிடத்தில் மரியாதை பெறுவீர்கள். பயணத்தின் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. வருமானம் கூடும். அலுவலகத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். வேலையில் வெற்றி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்திற்கு ஏற்ற காலமாக இது இருக்கும். 

தனுசு

சுக்கிரனின் ராசி மாற்றத்தால் தனுசு ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் வேலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். புதிய வேலையைத் தொடங்க இது நல்ல நேரமாக இருக்கும். வியாபாரிகளுக்கு இப்போது லாபம் உண்டாகும். 

ஆன்மீக நிகழ்ச்சிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். லாபம் அதிகரிக்கும். இதன் காரணமாக நிதி நிலை வலுவாக இருக்கும். கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இது ஏற்ற காலமாக இருக்கும். 

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் பண வரவை பலப்படுத்தும். கௌரவம், பதவி உயர்வு இருக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கல்வித்துறையில் தொடர்புடையவர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் பணியை அனைவரும் பாராட்டுவார்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். 

Related Posts