வாட்ஸ் அப் மூலம் இப்படியும் மோசடி நடக்கிறதா?
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உச்சத்தை தொட்டுள்ள இக்காலத்தில் அதன்மூலம் மோசடிகளும் நடைபெறுகின்றன.
முக்கியமாக வாட்ஸ் மூலம் நடைபெறும் மோசடி அண்மைகாலமாக அதிகரித்துள்ளது.
வாட்ஸ் அப் வழியாக தெரியாத எண்களில் இருந்து ஏதேனும் அழைப்புகள் வரும் பட்சத்தில் முடிந்த அளவு ஜாக்கிரதையாக இருப்பது மிகவும் நல்லது.
எதிர் முனையில் பேசுபவர் யார் என்பதைப் பற்றியும் அவருடைய தகவல்களையும் சரிபார்த்து கொள்ள வேண்டும்.
வாட்ஸ் அப்பில் இரு காரணி அங்கீகாரம் முறையை (Two factor Authentication) ஆன் செய்து வைத்திருப்பது மிகவும் நல்லது.
இதன் மூலம் உங்களது வாட்ஸ் அப்பில் முன்பை விட பாதுகாப்பாக இருப்பதோடு ஹேக் செய்வதும் தடுக்கப்படும்.
வாட்ஸ் அப்பில் வித்தியாசமான எண்களில் இருந்து அழைப்பு வந்தால் அதை தவிர்க்க வேண்டும்.
தெரியாத எண்களில் இருந்து வரும் லிங்குகளை கிளிக் செய்வதை எப்போதும் தவிர்க்க வேண்டும்.
அப்படி கிளிக் செய்யும் பட்சத்தில் மொபைலில் உள்ள அனைத்து தகவல்களையும் ஹேக்கர்களுக்கு சென்றுவிடும்.
இது மிகப்பெரிய பிரச்சனைகளையும், சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.