46,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நூற்புழுக்களை உயிர்பித்து விஞ்ஞானிகள் சாதனை
சைபீரிய விஞ்ஞானிகள் 46,000 ஆண்டுகளுக்கு முன் உயிர் வாழ்ந்த நுண்ணிய நூற்புழுக்களை உயிர்பித்து சாதனை படைத்துள்ளனர்.
இதேபோன்று கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னும் சைபீரிய விஞ்ஞானிகள் வட்டப்புழுக்களை கண்டுபிடித்து அதை உயிர்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையில், அதே இனத்தை சேர்ந்த 46,000 ஆண்டுகள் பழைமையான இதுவரை கண்டுபிடிக்கப்படாத நுண்ணுயிர் உயிரினத்தை முதன்முதலாக சைபீரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
விஞ்ஞானி கண்டுபிடித்த புழுக்கள் வடகிழக்கு ஆர்க்டிக்கில் உள்ள வண்டல் படிவுகளில் உள்ள புதைபடிவ பர்ரோவில் இருந்து எடுக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
45,839 மற்றும் 47,769 ஆண்டுகளுக்கு முன்பு ப்ளீஸ்டோசீன் சகாப்தத்தின் பிற்பகுதியில் இருந்து இந்த புழுக்கள் உறைந்திருந்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.