ஆடி அமாவாசை விரதம் இன்று: யார் விரதம் இருக்க வேண்டும்?

ஆடி அமாவாசை 2022 ஆடி 12 ம் திகதி (ஜூலை 28) கடைப்பிடிக்கப்படுகிறது.இந்த நாளில் யார் அமாவாசை விரதம் இருக்க வேண்டும் என்பதை விரிவாக பார்ப்போம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அமாவாசை விரத முறை தை அமாவாசைக்கு மட்டுமல்லா, மற்ற மாதங்களில் வரும் அமாவாசை தினத்தில் இருக்க வேண்டிய விரத முறைக்கும் பொருந்தும். ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும், கடைப்பிடிக்கப்படும் அமாவாசையாக உள்ளது.
அமாவாசை விரதம் யார் இருக்க வேண்டும்?
தாய், தந்தை இல்லாத ஆண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
கணவர் இல்லாத பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
பெண்கள் விரதம் இருக்கும் முறை:
* திருமணமான ஒரு பெண்ணுக்கு தாய் அல்லது தந்தை இல்லை என்றாலோ, அல்லது இருவரும் இல்லை என்றாலும் அவர் விரதம் இருக்கக் கூடாது. அவருக்கு கணவர் இருக்கும் நிலையில் அவர் அமாவாசை விரதம் இருக்கக் கூடாது.
பித்ரு தர்ப்பணம் என்றால் என்ன?: தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் இடையே உள்ள வேறுபாடுகள்
* பெண்ணிற்கு சகோதர்கள் இருப்பின் அவர்கள் பெண்ணின் பெற்றோருக்கு தர்ப்பணம், விரதம் இருப்பார்கள்.
* அப்பா இல்லை என்றால் அம்மா தர்ப்பணம் கொடுப்பார், விரதம் இருப்பார்.
* அம்மா இல்லை என்றால் அப்பா தர்ப்பணம் கொடுப்பார், விரதம் இருப்பார்.
அப்படி சகோதர் இல்லை, பெற்றோர் இருவரும் இல்லை என்றால் பெண்கள் கோயிலுக்கு சென்று தானம் கொடுக்கலாம், வீட்டிற்கு வந்து நான்கு பேருக்கு இலையில் சோறு போட்டு உணவளிக்கலாமே தவிர அமாவாசை விரதத்தை பெண் ஒருவர் கடைப்பிக்கக் கூடாது.
ஆடி அமாவாசை அன்று ஏன் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்?: தர்ப்பணதிற்கு உரிய நாட்கள் இதோ
5 விஷயம்:
1. ஒரு ஆணுக்கு தாய் இல்லாவிட்டாலோ, தந்தை இல்லாவிட்டாலோ, அல்லது இருவரும் இல்லை என்றாலோ அவர் அமாவாசை விரதத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
2. அமாவாசை அன்று உபவாசம் இருக்க வேண்டும்.
3. கண்டிப்பாக எள்ளும், தண்ணீரும் இரைத்து முன்னோர்களை வழிபட வேண்டும்.
4.அமாவாசை தினத்தில் கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
5. இயன்றவரை யாருக்காவது உணவு தானம் செய்யுங்கள் அல்லது பசுவிற்கு அகத்திக் கீரை கொடுங்கள்.
காக்கைக்கு உணவு வைப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா?- அறிவியல், ஆன்மிக காரணங்கள் இதோ!
அமாவாசை அன்று பெண்கள் நன்றாக சாப்பிட்ட பின்னர் விரதத்திற்கான உணவை சமைக்க வேண்டும்.கணவர் தான் விரதம் இருக்க வேண்டும். பெண்கள் விரதம் இருக்கக் கூடாது.
ஒரு கைப்பிடி அளவேனும் அன்னத்தை பெண்கள் இரவு உணவில் சேர்ப்பது பூரண ஆசி கிட்டும்.
பலன்கள்:
அமாவாசை தினத்தில் முன்னோருக்கு வழிபாடு நடத்துவது அவசியம். தாய், தந்தையர்களை யார் வழிபடுகிறார்களோ, அவர்களின் பிள்ளைகளும் நல் பலனை பெறுவார்கள்.