Home Archive by category

டுபாய் ஏற்றுமதியாகும் யாழ்.புளி வாழை

இலங்கையின் முதலாவது சேதன புளி வாழை அறுவடை அடுத்த சில நாட்களில் டுபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக விவசாய அமைச்சு ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

நாளை காலை அறுவடை மற்றும் பதப்படுத்தல் நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ராஜாங்கனை புளி வாழைப்பழம் திட்டத்தில் இருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் டுபாய் சந்தைக்கு 12,500 கிலோ புளி வாழைப்பழம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இருந்து வாரந்தம் 25,000 கிலோ சேதன புளி வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை எம்பிலிப்பிட்டிய மற்றும் செவனகல பிரதேசங்களில் வாழைப்பழச் செய்கை அதிகளவில் இடம்பெறுவதால், ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு இரண்டு வாழைப்பழ பதப்படுத்தும் வலயங்களை நிறுவ அமைச்சு தீர்மானித்துள்ளது.

தற்போது, ​​அமைச்சின் கீழ் விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தினால் ராஜாங்கனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இரண்டு வாழை ஏற்றுமதி மாதிரிக் கிராமங்கள் நிறுவப்பட்டுள்ளன. 

மேலும், செவனகல மற்றும் எம்பிலிப்பிட்டிய வாழை விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த இரண்டு வாழை ஏற்றுமதி மாதிரிக் கிராமத் திட்டங்களை நிறுவுவதற்கு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி செவனகல பிரதேசத்தில் கேவன்டிஷ் வாழை இனத்தையும், எம்பிலிப்பிட்டிய மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேசங்களில் புளிப்பு வாழை இனத்தையும் பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த இரண்டு தோட்டங்களும் முதற்கட்டமாக 400 ஏக்கர் 200 ஏக்கரில் பயிரிடப்படும், பின்னர் விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டம் 800 ஏக்கராக விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

யாழ் புளி வாழை திட்டத்தை இயற்கை பயிராக ஊக்குவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

தற்போது ராஜாங்கனை மற்றும் யாழ்ப்பாணத்தில் இரண்டு புளி வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

எம்பிலிப்பிட்டிய மற்றும் செவனகல புளி வாழை திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டமானது வாழை ஏற்றுமதி பதப்படுத்தும் நிலையத்தை பரவகும்புக்க அல்லது அதனை அண்மித்த பகுதிகளில் நிறுவ திட்டமிட்டுள்ளது.

Related Posts