Home Archive by category

'இலங்கையில் தனிநபரொருவருக்கு 12 ஆயிரத்து 444 ரூபாய் போதும்'

இலங்கையில்  தனிநபரொருவர், ஒரு மாதத்திற்கு வசிப்பதற்கு சராசரியாக 12 ஆயிரத்து 444 ரூபாய் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்திற்கான அறிக்கையின்படி, தனிநபர் ஒருவரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்தபட்ச மாதச் செலவு 12 ஆயிரத்து 444 ரூபா என குறிப்பிடப்படுகின்றது.

கொழும்பு மாவட்டத்தில் வசிப்பதற்காக ஒருவருக்கு அதிகபட்சமாக 13 ஆயிரத்து 421 ரூபாய் தேவைப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இது இலங்கையின் மாவட்டமொன்றில் நபரொருவர் தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக செலவிடும் அதிகூடிய தொகை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தின் வாழ்க்கைச் செலவு தேசிய மதிப்பீடாக 12 ஆயிரத்து 444 ரூபாவை விட 977 ரூபா அதிகமாகும்.

எனினும், இந்த அறிக்கைக்கு அமைய, மொனராகலை மாவட்டத்தில் வசிக்கும் ஒருவருக்கு தனது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு அங்கு வசிப்பதற்கு 11 ஆயிரத்து 899 ரூபா போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில், ஒருவர் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து வாழ்வதற்குத் தேவையான தொகை ஆயிரத்து 225 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்தில் 60.85 ஆக உயர்ந்துள்ளதுடன், உணவுப் பணவீக்கம் 90.9 சதவீதமானதாக உயர்ந்துள்ளது.

Related Posts