Home Archive by category

பிரான்ஸ் வாழ் மக்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

பிரான்ஸில் கடந்த பெப்ரவரி மாதத்தில் 5.6% சதவீதமாக இருந்த பணவீக்கம், தற்போது 5.7% சதவீதமாக அதிகரித்துள்ளது.

பணவீக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக INSEE கருத்துக்கணிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் உணவுப்பொருட்களின் விலை கடந்த பெப்ரவரி மாதத்தில் 14.8% சதவீதத்தால் அதிகரித்திருந்த நிலையில், மார்ச் மாதத்தில் 15.9% சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, பழங்கள், மரக்கறிகள், பாண், சீரியல், இறைச்சி, சீஸ், சொக்கலேட் மற்றும் குளிர்பானப்பொருட்கள் போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஜனவரி மாதம் குடும்பங்கள் தங்கள் தற்போதைய நுகர்வுச் செலவுகளுக்குச் செலுத்துவதற்காக கடனை அதிகமாகப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந் நிலைமை நீடித்தால் மக்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகும் நிலை உருவாகும் என INSEE கருத்துக்கணிப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Posts