Home Archive by category

இலங்கையை அழிக்கும் ''ஸ்ரீ''; அறிவியலாளர் அனுரா சி பெரேரா தெரிவிப்பு

ஸ்ரீ என்ற வார்த்தை எப்போது இலங்கையின் பெயருடன் சேர்க்கப்பட்டதோ அப்போதே இலங்கைக்கு அழிவுகாலம் ஆரம்பித்தது என அறிவியலாளர் அனுரா சி பெரேரா தெரிவித்துள்ளார்.

தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் இவர் மேலும் கூறுகையில், “பண்டாரநாயக்க மற்றும் விஜயகுமாரதுங்க படுகொலை முதல், ஸ்ரீ என்ற பெயரில் தொடங்கும் அரச நிறுவனங்கள் வரை திவால் நிலையை அடைந்தமைக்கும் இந்த பெயர் மாற்றமே காரணம்.

உதாரணமாக ஸ்ரீலங்கா ஷிப்பிங் கம்பெனி லிமிடெட், ஸ்ரீலங்கா டிரான்ஸ்போர்ட் போர்டு, ஸ்ரீலங்கா ரயில்வே துறை ஆகியவை திவாலானது.

இலங்கையின் கடைசி மன்னனின் பெயர் கூட ஸ்ரீவிக்கிரமசிங்க ராஜசிங்க.

1956 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடங்கப்பட்டது முதல் எங்கள் நாட்டுக்கு தீமையான காலம் ஆரம்பமானது.இதைத் தொடங்கியது எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க.

ஸ்ரீ என்ற சொல்லை வாகனங்களின் எண் பலகைகளுக்கு பயன்படுத்திய பின்னரே சிங்களர்கள் - தமிழர்கள் இடையே மோதல் போக்கு ஆரம்பித்தது.இந்த மோதலின் போது ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டது.

இந்தக் கட்சியின் நிறுவனர் மத போதகர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார்.

ஸ்ரீலங்கா என பெயரை மாற்றுவதற்கு முன்பு இந்த நாடு லங்கா, சிங்களே, தம்பாபண்ணி, சேரான்திப், தப்ரோபனே, சேலான், சிலோன், ஹெலாடிவா, தஹாம் திவைனை அல்லது லக்பிமா என ஸ்ரீ என்ற வார்த்தையே பயன்படுத்தாமல் இருந்தது” - எனத் தெரிவித்துள்ளார்.  

Related Posts