Home Archive by category

இலங்கையில் பால் மாவினை பயன்படுத்துவோர் அவதானம்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

புத்தாண்டின் போது சந்தைக்கு விநியோகிக்கத் தயார்படுத்தப்பட்ட, பாவனைக்கு உதவாத பால் மா மற்றும் அதன் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான களஞ்சியசாலையொன்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சோதனையின் போது, ​​விற்பனைக்கு தயாராக பதுக்கி வைக்கப்பட்டிருந்த காலாவதியான சுமார் 2,000 கிலோ பால் மா அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 80 இலட்சம் ரூபா பெறுமதியான காலாவதியான பால் மா பொருட்கள், காலாவதியான இனிப்புப் பொருட்கள் என்பனவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த பொருட்களுடன் களஞ்சியசாலையின் உரிமையாளர் மற்றும் வர்த்தகர் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கொழும்பு, மோதரை பொலிஸ் பிரிவில் பெர்குசன் வீதியில் அமைந்துள்ள களஞ்சியசாலையொன்றிலேயே, காலாவதியான பால் மா பாவனைக்குத் தகுதியற்றதாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படைத் தளபதி சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் உத்தரவுக்கமைய விசேட அதிரடிப் புலனாய்வுப் பிரிவினர் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts