Home Archive by category

இலங்கையில் காய்ச்சல் இருப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்

இலங்கையில் காய்ச்சல் இருப்பவர்களுக்கு அவசர அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
 
நாட்டில் தற்போது கோவிட் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கோவிட் மரணங்கள் பதிவாகாத நிலையில், தற்போது மீண்டும் கோவிட் தொற்று காரணமாக மரணங்கள் பதிவாகி வருகின்றன.
 
அதன்படி நேற்றைய தினம் 3 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியிருந்ததுடன், 129 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இவ்வாறான சூழ்நிலையில் காய்ச்சல் இருப்பவர்களுக்கு குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் தற்போது கோவிட் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு, முதல் இரண்டு நாட்களில் அதிக காய்ச்சல் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் தொடர்பில் விசேட அவதானம்

இதனால் விசேடமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பொரளை ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பிள்ளைகளில் கோவிட் தொற்றுக்குள்ளானவர்கள் தவிர டெங்கு மற்றும் இன்புளுவன்சா நோயாளர்களும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த வாரத்தில் மூச்சுத் திணறல் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Posts