Home Archive by category

மீண்டும் போர் பதற்றத்தில் தாய்வான்

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வானுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

அவரின் இந்த விஜயத்தை அடுத்து கடும் ஆத்திரமடைந்த சீனா, தாய்வானை சுற்றி தனது படைகளை நிறுத்தி போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது.இதனால் அந்த பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டதுடன் எந்த நேரமும் தாய்வான் மீது சீனா போரை தொடுக்கலாம் என்ற நிலை இருந்தது.

எனினும் பின்னர் போர்ப்பயிற்சியை முடிவிற்கு கொண்டு வந்த சீனா, போர்ப்பதற்றத்தையும் தணித்தது.

இந்த நிலையில் மீண்டும் அமெரிக்க ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் தாய்வானுக்கு விஜயம் செய்துள்ளனர்.இவ்வாறு சென்ற அவர்கள் தாய்வான் அதிபர் சாய் இங் வென்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அமெரிக்கர்களின் இந்த செயற்பாடு சீனாவை மீண்டும் கடும் கோபத்திற்குள் தள்ளியுள்ளது.இதனையடுத்து தாய்வானை சுற்றி மீண்டும் போர்பயிற்சியை தொடங்கியுள்ளது சீன இராணுவம்.
 
இதுபற்றி சீன ராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "தாய்வான் தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் வான்வெளியில் போர் தயார்நிலை ரோந்து மற்றும் போர் பயிற்சிகள் திங்கட்கிழமை தொடங்கியுள்ளன. இது, தாய்வான் நீரிணையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை குறைமதிப்புக்கு உட்படுத்தும் அமெரிக்கா மற்றும் தாய்வானுக்கு எதிரான ஒரு கடுமையான தடுப்பு நடவடிக்கையாகும்" என கூறப்பட்டுள்ளது. 

Related Posts