Home Archive by category

இணையத்தில் கசிந்த உக்ரைன் போர் தொடர்பான அமெரிக்காவின் ரகசிய ஆவணங்கள்

ரஷ்யாவிற்கு எதிரான வசந்தகால தாக்குதலுக்கு உக்ரைனை தயார்படுத்த உதவும் அமெரிக்க மற்றும் நேட்டோ திட்டங்களின் விவரங்களை வழங்கும் ரகசிய ஆவணங்கள் சமூக ஊடக தளங்களில் பரவியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.அதையடுத்து இந்த பாதுகாப்பு மீறல் குறித்து மதிப்பிட்டு வருவதாக பென்டகன் தெரிவித்துள்ளது.சமூக ஊடக இடுகைகளின் அறிக்கைகளை நாங்கள் அறிவோம், மேலும் பாதுகாப்பு துறை இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்து வருகிறது என்று அமெரிக்க பாதுகாப்பது பத்துறையின் துணை செய்தி செயலாளர் சப்ரினா சிங் கூறினார்.

இந்த ஆவணங்கள் ட்விட்டர் மற்றும் டெலிகிராமில் பரவியது, மேலும் ஆயுத விநியோகம், பட்டாலியன் பலம் மற்றும் பிற முக்கிய தகவல்கள் பற்றிய விளக்கப்படங்கள் மற்றும் விவரங்கள் அடங்கியுள்ளதாக டைம்ஸ் தெரிவித்துள்ளது.ஆவணங்களில் உள்ள தகவல் குறைந்தது ஐந்து வாரங்கள் பழமையானது, அதில் மிக சமீபத்திய திகதி என்பது மார்ச் 1 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்களில் ஒன்று 12 உக்ரைன் போர் படைப்பிரிவுகளின் பயிற்சி அட்டவணையை சுருக்கமாக விவரிக்கிறது, மேலும் அவர்களில் ஒன்பது அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளால் பயிற்சி பெற்றதாகவும், மேலும் 250 டாங்கிகள் மற்றும் 350-க்கும் மேற்பட்ட இயந்திரமயமாக்கப்பட்ட வாகனங்கள் தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கசிந்துள்ள இந்த ஆவணங்களில் ஒன்று உயர்ந்த ரகசிய முத்திரையைக் கொண்டிருந்ததாகவும், அவை ரஷ்ய அரசு சார்பு சேனல்களில் விநியோகிக்கப்பட்டதாகவும் ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.ஆவணங்களில் உள்ள தகவல்கள், உக்ரைன் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வெடிமருந்துகளுக்கான செலவின விகிதங்களை விவரிக்கின்றன, இதில் ஹிமார்ஸ் ராக்கெட் அமைப்புகள், ரஷ்ய படைகளுக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்ட அமெரிக்கா தயாரித்த பீரங்கி ராக்கெட் அமைப்புகள் ஆகியவை அடங்கும்.

ரஷ்யாவின் தவறான தகவல் பிரச்சாரத்தில் சில ஆவணங்கள் மாற்றப்பட்டதாகத் தோன்றுவதாக இராணுவ ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஏனெனில், ஒரு ஆவணத்தில் உக்ரேனிய துருப்புக்களின் இறப்புகளை உயர்த்தியும் ரஷ்ய போர்க்கள இழப்புகளைக் குறைத்தும் இருப்பதாக கூறுகின்றனர்.  

Related Posts