Home Archive by category

நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நால்வரை தெரிவு செய்த நாசா

நிலவுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்ப அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி கழகமான நாசா திட்டமிட்டிருக்கிறது.

இதற்காக ஓரியன் விண்கலத்தை நாசா உருவாக்கியது. இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் ஆர்ட்டெ மிங்-1 ஓரியன் விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. ஆளில்லாமல் அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம் நிலவுக்கு 130 கி.மீ. தொலைவில் இருந்து துல்லியமாக படமெடுத்து அனுப்பியுள்ளதுடன் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது.

இதையடுத்து ஆர்ட்டெ மிஸ்-2 திட்டத்தை நாசா விஞ்ஞானிகள் தொடங்கினார்கள். இந்த விண்கலத்தில் மனிதர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இதன்படி அமெரிக்காவை சேர்ந்த ரீட் வைஸ்மேன்,  விக்டர் குளோவர்,  பெண் வீராங்கனையான கிறிஸ்டினா கோச்,  கனடாவைச் சேர்ந்த ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்கள் 4 பேரும்  நீல நிற விண்வெளி உடையில் அறிமுகப்படுத்தப்பட்டனர். கிறிஸ்டினா கோச் நிலவு பயணத்துக்கு அனுப்பப்படும் முதல் பெண் என்ற சிறப்பை பெறுகிறார். அவர் எலக்ட்ரிகல் என்ஜினீயர் ஆவார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபோது விண்வெளி நடைபயணத்தில் பங்கேற்ற முதல் முழு பெண் என்ற பெருமையை பெற்றார். ஆர்ட்டெமிஸ்-2 விண்கலம் நிலவை வட்டமிடும். ஆனால் அதன் மீது தரையிறங்காது.

Related Posts