Home Archive by category

இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா? ; நாளை கடைசி ஒரு நாள் போட்டி

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி முதல் 2 போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

முதல் ஆட்டத்தில் 3 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நாளை (27-ந் தேதி) நடக்கிறது.

இந்த ஆட்டத்திலும் இந்திய அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஹாட்ரிக் பெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஒயிட் வாஷ் செய்யும் வகையில் இந்திய வீரர்கள் அதே உத்வேகத்துடன் விளையாடுவார்கள். முதல் 2 போட்டியிலும் விளையாடாத வீரர்களுக்கு நாளைய ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஹர்ஷ்தீப் சிங் ஆகியோர் இதுவரை 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறவில்லை. காயம் காரணமாக ஜடேஜாவும் ஆடவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபத்தில் வங்காள தேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் இழந்தது. தற்போது இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்துள்ளது. நிக்கோலஸ் பூரண் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் இந்த போட்டியிலாவது வெற்றி பெற்று ஆறுதல் அடையுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த அணி இரண்டு ஆட்டத்திலும் கடுமையான போராட்டத்துக்கு பிறகே தோற்றது. இதனால் அந்த அணி வீரர்கள் அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள். இரு அணிகளும் நாளை மோதுவது 139-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 138 ஆட்டத்தில் இந்தியா 69-ல் வெஸ்ட் இண்டீஸ் 63-ல் வெற்றி பெற்றுள்ளது. 2 ஆட்டம் டை ஆனது. 4 போட்டி முடிவு இல்லை.
 

 

Related Posts