Home Archive by category

யாழ்.சிங்கள மகா வித்தியாலய காணி இராணுவத்தினருக்கு நிரந்தரமாக வழங்கப்படுகிறதா?

யாழ் சிங்கள மகா வித்தியாலய காணியை இராணுவத்தினருக்கு நிரந்தரமாக வழங்குவதற்கு கல்வி அமைச்சோ, மாகாணத் திணைக்களங்களோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வடமாகாண கல்வி அமைச்சின் செயளாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் சிங்கள மகா வித்தியாலய காணியை 95 ஆம் ஆண்டிலிருந்து இராணுவத்தினர் பயன்படுத்தி வருகிறார்கள். 

அந்தக் காணியை அவர்களுக்கு வழங்குவது தொடர்பான கோரிக்கை கொழும்பிலிருந்து அனுப்பப்பட்டிருந்தது. 

அந்தக் காணியை நிரந்தரமாக வழங்குவதற்கு கல்வி அமைச்சோ, மாகாணத் திணைக்களங்களோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழங்கப்பட்டதென்று வந்த செய்தி பிழையானது.  

மேலும், பல ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக  கஷ்டப் பிரதேசத்தில் பணியாற்றுகிறார்கள். அதனை நிவர்த்தி செய்ய  வட மாகாணத்திற்கென இடமாற்று கொள்கை தயாரிக்கப்பட்டு இறுதி நிலையில் இருக்கிறது.

மாணவர்கள் மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்கள் தங்களுடைய விடயங்களை அதிகாரிகளோடு கலந்துரையாட  சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

ஏற்கனவே பொதுவெளியில் மாணவர்கள் தங்களுடைய விடையங்களை கலந்துரையாடுகிற வாய்ப்பு வெளிநாடுகளில் காணப்படுகிறது. 

இது ஆசிரியர்கள் தொடர்பான குறைகளை கூறுவதற்கு என்று தப்பாக நினைத்து விடக்கூடாது. என்றார்.

Related Posts