Home Archive by category

பிரதமர் ட்ரூடோ எவ்வளவு சம்பாதிக்கிறார்? பதில் தெரியாமல் தடுமாறிய கனேடிய மக்கள்

பிரதமர் பொறுப்பில் இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ ஆண்டுக்கு எவ்வளவு ஊதியமாக பெறுகிறார் என்பது பெரும்பாலான கனேடிய மக்களுக்கு தெரியவில்லை என ஆய்வில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சுமார் 1,000 கனேடிய மக்களிடம் முன்வைக்கப்பட்ட இந்த கேள்விக்கு, வெறும் 18% மக்களே சரியான விடை அளித்துள்ளனர். அதாவது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆண்டுக்கு 301,000 டொலர் முதல் 400,000 டொலர்கள் வரையில் ஊதியமாக பெறுகிறார் என்பதை குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் ஜஸ்டின் ட்ரூடோவின் இந்த ஆண்டு ஊதியமானது 379,000 டொலர் என்றே கூறப்படுகிறது. ஆய்வில் தெரிவிக்கப்பட்ட பதிலின்படி, பிரதமரின் ஆண்டு சம்பளம் 301,000 டொலருக்கும் குறைவாக இருப்பதாக 42 சதவீத மக்கள் கருதுகின்றனர்.

ஆனால், 24 சதவீதம் பேர் பிரதமர் ட்ரூடோ ஒவ்வொரு ஆண்டும் $400,000க்கு மேல் சம்பாதிப்பதாக நம்புகின்றனர். 9 சதவீத மக்கள், அதுவும் லிபரல் வாக்காளர்கள், ட்ரூடோ ஆண்டுக்கு 500,000 டொலருக்கும் அதிகமாக ஊதியமாக பெறுகிறார் என நம்புகின்றனர்.

Related Posts