ஜெர்மன் அரச தலைவர் கனடாவுக்கு பயணம்
ஜெர்மனிய அதிபர் ஒலாஃப் சோல்த்சு கனடாவிற்கு அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்.
இந்த மாத இறுதியில் அவர் இவ்வாறு கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொன்றியல், ரொறன்ரோ, ஸ்டிபென்வெலி மற்றும் நியூபவுன்ட்லாண்ட் ஆகிய பகுதிகளுக்கு அவர் விஜயம் செய்ய உள்ளார்.
ஜெர்மனிய ஜனாதிபதி கனேடிய மற்றும் ஜெர்மனிய வர்த்தக பிரமுகர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரஸ்ய எண்ணெய் குழாய்க்கு அனுமதி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது.