Home Archive by category

உலக பணக்கார அரசியல் தலைவர் பட்டியலில் மீண்டும் முதலிடதில் புடின்!

 உலக பணக்கார அரசியல் தலைவர் பட்டியலில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். தனியார் நிறுவனம் ஒன்று உலக அரசியல் தலைவர்களில் யார் அதிக பணக்காரர் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில், உலக அளவில் நன்கு அறியப்பட்ட மற்றும் ரஷ்யாவின் ஜனாதிபதியாக பல ஆண்டுகளாக நீடித்து வரும் விளாடிமிர் புடின், உலக பணக்கார அரசியல் தலைவர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார்.

ஜனாதிபதி புடினின் சொத்து மதிப்பு சுமார் 70 முதல் 200 பில்லியன் டாலர்களாக இருக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் கொட்டிக் கிடக்கும் எண்ணெய் வளங்களே, சர்வதேச அளவில் ஜனாதிபதி புடினின் செல்வாக்கிற்கும், சொத்து மதிப்பிற்கும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

அதேவேளை அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக 12 ஆண்டுகள் இருந்த மைக்கேல் ப்ளூம்பெர்க் இந்த பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு சுமார் 76.8 பில்லியன் டாலர்கள் என தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூன்றாவதாக மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த துபாயின் அதிபர் விவகாரங்களுக்கான துணை பிரதமர் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான் இடம் பிடித்துள்ளார்.

மேலும் நான்காவது மற்றும் ஐந்தாவது பணக்கார அரசியல் தலைவர்கள் வரிசையில், பிலிப்பைன்ஸ்-ன் இமெல்டா மற்றும் வட கொரியாவின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் இடம் பெற்றுள்ளனர்.

Related Posts