Home Archive by category

இலங்கை அரசின் செயல் கவலை அளிக்கிறது : மனித உரிமைகள் பேரவை

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் முக்கிய குழு இலங்கையில் நடைபெறும் அமைதியான போராட்டங்களுக்கு அரசின் 'கடுமையான' பதில்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ளது.

அத்துடன் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமைகளை இலங்கை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்றும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

எந்தவொரு எதிர்ப்பு தொடர்பான வன்முறைக்கும் பொறுப்புக் கூற வேண்டும்.

அதேநேரம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதை ஊக்குவிப்பதில் குடியியல் சமூகத்தின் முக்கியப் பங்கை கோடிட்டுக் காட்டுவதாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மெசிடோனியா ஆகியவற்றை உள்ளடக்கிய முக்கிய குழு தெரிவித்துள்ளது.

தண்டனை தவிர்ப்பு மற்றும் ஊழல்களுக்கு இலங்கை அதிகாரிகள் தீர்வு காணவேண்டும் என்றும் முக்கிய குழு வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வரவேற்கும் அதே வேளையில், நெருக்கடியிலிருந்து வலுவாக வெளியே வருவதற்கு சீர்திருத்தங்கள் அவசியம் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

Related Posts