Home Archive by category

மகிந்த ராஜபக்ச ஆதிசிவன் கோவிலை கட்டித்தாவிட்டால் அவரின் பரம்பரை வீதியில் பிச்சை எடுக்கும்

கீரிமலையில் அமைந்திருந்த ஆதிசிவன் கோவில் அழிக்கப்பட்டமைக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெறுப்பு கூறவேண்டும் எனவும் அவ்வாறு இல்லை எனில் அவருடைய பரம்பரையே பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என இந்து சமயப் பேரவையின் தலைவர் ஈசான சிவ சக்தி கிரீபன் காட்டமாக கருத்து வெளியிட்டள்ளார்.

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் கடல் மட்டத்திலிருந்து மிகவும் உயரமான மலை போன்ற ஒரு பாறைப்பகுதியில் ஆதிசிவன் கோயில் அமைந்திருந்தது. 

இந்த சிவன் கோயில் தற்போது இல்லை என்று சென்றவர்கள் தெரிவித்திருந்த நிலையில் எமது சமூகத்தின் செய்தி பிரிவு சக்தி கிரீபனிடம் எழுப்பியிருந்த கோள்விக்கு அவர் இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.

யுத்த காலத்தில் திட்டமிட்டு விமானங்கள் மூலம் குண்டு போட்டு இந்து கோவிலகள் அழககப்பட்டிருந்தாகவும் அத்துடன் இராணுவ நடவடிக்கை என்ற போர்வையில் இந்து ஆலையங்களின் புனிதத்தன்மை அழிக்கப்பட்டதாகவும் இந்து சமயப் பேரவையின் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறான செயல்களினாலேயே இன்று மகிந்த ராஜபக்ச பதியை இழக்க நேரிட்டதாகவும் எனவே அவரது சொந்த நிதியில் அழிக்கப்பட்ட ஆதி சிவன் கோவிலை மீள் நிர்மானித்து மக்களிடம் கையிக்க வேண்டும் என்றும் இந்து சமயப் பேரவையின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒருகோவில் அழிக்கப்பட்டாலே அல்லது அதன் நிதிதிய பூசைகள் தடைப்பட்டாலே அந்த நாட்டினை ஆட்சி செய்கின்ற அரச தலைவர் பதிவியை இழப்பார் என்றும் அத்துடன் நாட்டில் பஞ்சம் பட்டினி என்பன தலைவித்தாடும் என்றும் இந்து சமயப் பேரவையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்பு இருந்ததை விடவும் 100 மடங்கு பிரமாண்டமாக கீரிமலையில் அழிக்கப்பட்ட ஆதி சிவன் ஆலையத்தை மீண்டும் கட்டித்தரவேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts