Home Archive by category

116 ஆவது வடக்கின் போர்; யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 9 விக்கெட்டுக்களால் வெற்றி

வடக்கின் போர்  என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும்  இடையிலான 116 ஆவது போட்டியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 9 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும்  இடையிலான 116 ஆவது போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமானது.

9,10,11 ஆம் திகதிகள் என மூன்று நாட்கள் இரண்டு இனிங்ஸ்களாக இப் போட்டி நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் பரியோவான் கல்லூரி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தனது முதல் இனிங்ஸிலே 66ஓவர்கள் வரை வரை துடுப்பெடுத்தாடி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 279 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் மத்திய கல்லூரி சார்பில் அஜே 74ஓட்டங்களையும், விதுஷன் 71 ஓட்டங்களையும் சன்சஜன் 42ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் யாழ் பரியோவான் கல்லூரி சார்பில் அபிஷேக் 3 விக்கெட்டுகளையும், கஜகர்ணன், விதுஷன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

பதிலுக்கு தனது முதலாம் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய யாழ்பாணம் பரியோவான் கல்லூரி 51.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 127 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் யாழ் பரியோவான் கல்லூரி சார்பில் பென்சர் ஜெசியல் 43 ஓட்டங்களையும், சபேசன் 34 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

பந்துவீச்சில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சார்பில் நியூட்டன் -4, கஜன் -3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

153 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த மத்தியகல்லூரி பலோன் முறையில் இரண்டாம் இனிங்சிற்காக முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்பத்தை யாழ் பரியோவான் கல்லூரிக்கு வழங்கியது.

அதன்படி இரண்டாம் இனிங்ஸ்ற்காக துடுப்பெடுத்தாடிவரும் பரியோவான் கல்லூரி 54 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் யாழ் பரியோவான் கல்லூரி சார்பில் ஜனந்தன் 26 ஓட்டங்களையும், பென்சர் ஜெசியல் 25 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

பந்துவீச்சில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சார்பில் பருதி -4, நியூட்டன் -3, விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

9 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலளித்து துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஒரு விக்கட்டை இழந்து 9 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

Related Posts