சர்வதேச நாணய நிதியத்திற்கு நேற்று இரவு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது – ஜனாதிபதி அறிவிப்பு
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான சீனாவின் உத்தரவாதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநரும் தானும் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பிவைப்பதற்கான கடிதத்தில் நேற்று இரவு கையொப்பமிட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அவர்கள் பரிசீலனைகளை மேற்கொண்ட பின்னர் இன்னும் சில வாரங்களில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்த தற்போதும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவே அரசாங்கம் மிகவும் கடினமான பல நடவடிக்கைகளை எடுத்தது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.