Home Archive by category

150 அகதிகளையும் நாட்டிற்குள் உள்வாங்குமாறு அவுஸ்திரேலியாவை வலியுறுத்தும் ஐ.நா.

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளை அங்கிருந்து வெளியேற்றுமாறு ஐக்கிய நாடுகள் சபை வலியுத்துகின்ற அதேவேளை கண்டனமும் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக நவுரு, பப்பு நியூ கினியா தீவுகளில் 150ற்கும் மேற்பட்ட அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றி ஆஸ்திரேலியாவுக்குள் அழைத்து வரவேண்டும் என ஆஸ்திரேலியாவில் உள்ள மனித உரிமை அமைப்புகள், மற்றும் செயல்பாட்டாளர்களுடன் இணைந்து அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையரும் வலியுறுத்தியுள்ளார். 

சர்வதேச விதிகளின்படி தஞ்சக்கோரிக்கையாளர்களை பாதுகாப்பாகக் குடியமர்த்துவதற்கான சட்டரீதியிலான கடமை ஆஸ்திரேலியாவுக்கு உள்ளதாக ஜ.நா குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச சட்டத்தின் கீழ் நவுருத்தீவு அல்லது பப்பு நியூ கினியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கான பொறுப்பிலிருந்து இருந்து ஆஸ்திரேலிய அரசு விலகவோ அல்லது அதிகார வரம்பை, பொறுப்பை மட்டுப்படுத்தவோ முடியாது என்றும் ஜ.நா குறிப்பிடுகின்றது.

நவுருவில் உள்ள 66 அகதிகள், பப்பு நியூ கினியாவில் உள்ள 92 அகதிகளை ஆஸ்திரேலியாவுக்குள் கொண்டு வர வேண்டும் என சட்டமசோதா ஒன்றை ஆஸ்திரேலிய பசுமைக் கட்சி தரப்பிலிருந்து அண்மையில் அவுஸரேலிய நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. 

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கூற்றுப்படி, கடல் கடந்த தடுப்பு கொள்கை 2013ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் இதுவரை 12 தஞ்சக்கோரிக்கையாளர்கள் உயிரிழந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் போது பலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவங்களும் இடம்பெற்றிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts