Home Archive by category

கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை சிதைத்த பனிப்புயல்! அமெரிக்காவில் 17 பேர் பலி

குளிர்காலத்தில் உறைந்துபோன அமெரிக்காவில், மில்லியன் கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கினார்கள். சனிக்கிழமை மாலை, நாட்டின் சில பகுதிகள் பனிப்புயல் ஏற்பட்டு, அமெரிக்க மக்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் சுணக்கம் ஏற்பட்டது.

நாட்டில் எட்டு மாகாணங்களில் குளிர்கால புயல் தொடர்பான சுமார் 17 இறப்புகளை நாடு உறுதிப்படுத்தியுள்ளது, தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆழ்ந்த உறைபனியில் உள்ளதாக, நியூயார்க்கின் கவர்னர் கேத்தி ஹோச்சுல் தெரிவித்தார். அங்கு,  அவசர சேவைகள் செயல்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசிய வானிலை சேவை (NWS), சனிக்கிழமை இரவு, கிரேட் லேக்ஸ் பகுதிகளில் பனியால் ஏற்படும் பனிப்புயல் நிலைமைகள் கிறிஸ்துமஸ் தினத்தில் தொடரும் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தது. "திங்கட்கிழமை வரை வெப்பநிலை மிகவும் குறைந்தே இருக்கும்" என்றும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

கொடிய குளிர்கால புயலின் விளைவாக 3,300 அமெரிக்க விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்பதோடு, சனிக்கிழமையன்று 7,500 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின, கிட்டத்தட்ட 6,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

மேலும் படிக்க | கொரோனாவுக்கு நடுவே சீனாவில் உதட்டு முத்த ட்ரெண்டிங்..! இதெல்லாம் தேவையா பாஸ்?

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டிய இந்த காலத்தில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படும். எனவே, அங்கு மக்களின் இயல்பு வாழ்வில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என்பதால் மக்கள் பனிக்காலத்திற்கு என்று தயாராகிக்கொள்வார்கள். ஆனால், இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை அவர்களால் நிம்மதியாக கொண்டாட இயலாதப்படி பாம் புயல் உருவெடுத்துள்ளது. 

அமெரிக்காவில் வீசும் பனிப்புயல் தற்போது அங்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து உருவாகிய இந்த புயலினால், அமெரிக்கா முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். அதிக பனிப்பொழிவால் ஏற்பட்ட கார் விபத்துகளிலும் பலர் உயிரிழந்துள்ளனர்.  

இந்த புயலால் அமெரிக்காவின் மத்தியகிழக்கின் மேல் பகுதியும், வடகிழக்கின் உள் நகரங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

நாடு முழுவதும் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கடுமையான பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று நியூயார்க்கை புரட்டி போட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சில நேரம், காற்றின் வேகம் மணிக்கு 60 மைல்களுக்கும் அதிகமாக இருந்தது. சில பகுதிகளில் 2 அடிக்கு மேல் கடுமையான பனி இருந்தது.

வெப்பநிலை ஜீரோ டிகிரிக்குக்கும் கீழே இருக்கும் நிலையில், குளிர் மற்றும் வறண்ட காற்றுகள் மோதிக் கொள்வதால் ஏற்படும் புயலுக்கு பாம் புயல் சொல்கின்றனர். 

Related Posts